நமக்கு கேட்கப்ப்பட்ட வினாக்களில் துல்லியத்தன்மை ஒரு துளியைக் கூடகாணவில்லையே.ஒரு வினாவிற்கு இரண்டுவிடை, மூன்று விடை, நான்குவிடையும் சரி என இழுத்துக்கொண்டேசெல்கிறார்களே!!!
அப்படியானால்கேட்கப்பட்ட வினாக்களின் நோக்கம்தான் என்ன?
*என் நண்பன் ஒருவனிடம் இரண்டு மணி நேரம் கால அவகாசம்கொடுத்து ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 வினாத்தாளுக்கான விடைகளை குறிக்கும்படி கூறினேன்.அவனும் ஒரு
மணி நேரத்திற்குள் இரண்டுவினாத்தாளுக்குமான விடைகளையும் குறித்து முடித்தான்.மதிப்பீடு செய்து பார்க்கும் போதுஇரண்டிலும் முறையே 50; 50 மதிப்பெண்கள் பெற்றிருந்தான்.இது தோராயமாக 33% ஆகும்.
இதேபோல்10-ம் மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுவினாத்தாளை கொடுத்து பதிலளிக்க கூறியபோது அவனால் 10% மதிப்பெண்கள் கூட முழுமையாகப் பெறமுடியவில்லையே.
என்ன பண்றது அவன் இப்பதான்இரண்டாம் வகுப்பு படிக்கிறான்...
*ரயில்வேடிபார்ட்மெண்ட்ல் சாதாரன வேலைக்கானநோட்டிபிகேசன்ல கூட காலிபணியிடம் எவ்வளவு, தேர்வு முடிவு என்றைக்கு, பணிநியமனம்எப்போது என எல்லாதகவல்களையும் தெளிவாக பெற முடிகின்றது.
ஆனால் நமது தகுதித்தேர்வில்துல்லியமான விடை எது என்றுவெளியிட கூட இவர்களுக்கு தைரியம்இல்லை.
எவ்வளவுகாலிப்பணியிடம் என முன்னரே அறிவித்தால்அப்ளிகேசன் சேல்ஸ் ஆகுமா?ஆகாதா? என்ற சுயநல நோக்கம் தானே???
நீங்கள்1675 தான் இடைநிலை ஆசிரியர்களுக்கான காலிபணியிடம்என்று அறிவித்திருந்தால் நான் எதுக்கு எனக்குஒன்னு, என் சித்தப்பாவுக்கு ஒன்னுனுஅப்ளிகேசன் வாங்குறேன்.
ஆறு மாதம் வீட்டிலேயே உட்கார்ந்துபத்தாம் வகுப்பு வரை உள்ளஅனைத்து புத்தகங்களையும் படிக்குறேன்.
உங்களாலஒரு வினாவிற்கு சரியான விடை எதுஎன கணிக்க முடிகிறதோ? இல்லையோ?
எங்களால1675 காலிபணியிடங்கள் மட்டும் இருக்கிறது எனதெரிந்திருந்தால் +2 ல 85%,D.T.Ed ல 85 % Tet ல 100 மதிப்பெண்கள் எடுத்தால்கூட இந்த ஆண்டு பணிவாய்ப்புகிடைக்காது என எங்களால் கணித்திருக்கமுடியும்.கடந்த ஒரு வருடமாககாத்திருக்காமல் வேறு வேலைக்காவது சென்றிருப்போம்அல்லவா?
SGT-ல்மதிப்பெண் தளர்வு BC & MBC பிரிவினருக்குகொடுத்ததன் நோக்கம் தான் என்ன? 82 மதிப்பெண் எடுத்த ஒருவனுக்கு, பன்னிரண்டாம்வகுப்பு மற்றும் ஆசிரியர் பட்டயப்பயிற்சியில்100% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் கூட 72.80 தானே வெயிட்டேஜ் வரும்...
இதுல நகைச்சுவை என்னவென்றால் இப்போது அதையும் ( 5%) பறித்துவிட்டார்கள்.
2012-ல்நம்மை திறமைசாலிகள் அல்ல என ஒதுக்கியகரங்கள், தற்போது நாம் அதிஷ்டசாலிகள்அல்ல என மறுக்கின்றனர்.
எங்களுக்கும்காலம் வரும்.
நாங்களும்பாடம்(Teaching) கற்பிப்போம்.
(உங்களோடபாணியில் "விரைவில்").
Article by
சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment