என் பெயர் ஆண்டாள், வயது40, ஊர் ஓசூர் விவசாய கூலிசெய்யும் ஏழ்மைக்குடும்பத்தில் பிறந்தேன்..1992 ம்ஆண்டு ஆசிரியர் பயிற்சி படித்து கொண்டிருந்தேன்திடிரென அப்போதைய அரசு அப்ருவல் இல்லாதநிறுவனம் என்ற பெயரில் எங்கள்நிறுவனத்தில் படித்த மாணவர்களின் படிப்பினை ரத்து செய்தனர் அன்றேஇறந்திருப்பேன் இருந்தாலும் என் ஆசிரியர் கனவுதடுத்தது...பல்வேறுசூழ்நிலைக்கிடையில் மறுபடியும் கஸ்டப்பட்டுD.T.Ed.,B.Litt.,MA படித்தேன் ..
தற்போதுஆசிரியர் தகுதித்தேர்வுக்காக என் இரண்டு குழந்தைகளையும்தன்னந்தனியே தவிக்கவிட்டு அல்லும் பகலும் அயராதுபடித்து தாள் 1ல் 13TE33100141- 110 மதிப்பெண்ணும் தாள்2ல் 13TE33200122- 98 மதிப்பெண்ணும்பெற்றேன்..
எங்கள்ஊரே என்னை பாராட்டியது, சந்தோச சாரலில் இருந்த என்குடும்பத்திற்க்கு பின்னால் வரப்போகும் வெய்ட்டேஜ் என்னும் விசத்தை பற்றிதெரியவில்லை...
பின் வெய்ட்டேஜ் ஜி.ஓ 71ஆல்எனக்கு இரண்டு தாள்களிலும் பணிநியமனபட்டியலில் இடம்பெறவில்லை. அன்றிரவே தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய துணிந்தேன் ஆனால்முடியவில்லை அன்றும் என் உயிராகநின்னைக்கும் ஆசிரியர் கனவு தடுத்து விட்டது...
மொத்ததில்சொல்லப்போனால் என் ஆசிரியர் கனவையேகுழிதோண்டி புதைத்து விட்டார்கள் தினமும் கண்ணீரிலே தலையணைகள்நனைகின்றன...
நான் என்ன பாவம் செய்தேன்... நான் பிறந்தது குற்றமா?? இல்லை படித்தது குற்றமா?? இல்லை ஆசிரியர் பணியை லட்சியமாக கொண்டதுகுற்றமா?? என் ஆசிரியர் கனவைநிறைவேற்ற எத்தனை வலிகள்...
இறைவா என்னையும் என்னை போன்றோரை காப்பாற்றவழியே இல்லையா????
Article by
P.Rajalingam Puliangudi...
No comments:
Post a Comment