கடந்த மாதம் 28ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரக திறனாய்வு தேர்வு வரும் அக்டோபர் 12ம் தேதி நடைபெறுகிறது. ஊரக பகுதி மாணவர்களின் திறனை பரிசோதித்து அவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் வகையில் ஊரக திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
8ம் வகுப்பு தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று தற்போது 9ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டிருந்தது. தமிழக அரசு ஊரக திறனாய்வு தேர்வு கடந்த மாதம் 28ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டு நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு வரும் 12ம் தேதி காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment