15.11.2014 அன்று கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்,விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்துகொண்ட அறிவியல் கண்காட்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சா.மார்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இதில் ஊரக மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு.ப.மோகன் அவர்கள், மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.வி.சம்பத் IAS அவர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு.டாக்டர்.காமராஜ் அவர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திருமதி அழகுவேல் பாபு அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களின் படைப்புகளை கண்டுகளித்து சிறந்த படைப்புகளை தேர்வுசெய்து பரிசளித்தனர்.இதில் முதல் நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் கலந்துக்கொள்ள தகுதியுடையவர் ஆவார்கள்.மேலும் மாவட்ட கல்வி அலுவலர்கள் திருமதி.கோ.தனமணி,திரு.ந.பாஸ்கரன் ,திரு.எஸ்.மாதவன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.இது போன்ற நிகழ்வுகள் அரசுப்பள்ளிகளில் அரசால் நடத்தப்படும்போது மாணவர்களின் அறிவியல் திறமை கண்டிப்பாக வெளிப்படும் என்பதில் சந்தேகம் இல்லை..என்றும் ஆசிரியர்களின் நலனில் கல்விக்குரல்..
Forms for Teachers
Latest GO's
Welcome to Kalvikural
Sunday, 16 November 2014
Saturday, 15 November 2014
பிறரின் உயிரை காப்பாற்றிய 7 சிறுவர், சிறுமிகளுக்கு வீர விருது!!!
ஆபத்தான சூழ்நிலையில், புத்திசாலித்தனமாக நடந்து, தன் உயிரை பணயம் வைத்து, மற்றவரின் உயிரை காப்பாற்றிய, ஏழு சிறுவர்கள், இரண்டு சிறுமியருக்கு, மாநில அரசு வழங்கும், வீர விருது வழங்கப்படுகிறதுகுழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர், உமாஸ்ரீ கூறியதாவது: நாயிடமிருந்து தப்பிக்கும் போது, கால் இடறி, 25 அடி ஆழ் கிணற்றில் விழுந்த, 5 வயது சிறுவன் சைஜனை காப்பாற்றிய, ரிப்பன்பேட்டை கவடூரு கிராமத்தின் தீக் ஷித்; பள்ளிச்சுற்றுலாவின் போது, குளத்தில் மூழ்கிய இரு மாணவர்களை காப்பாற்றிய, மதுகிரியின் கிஷன் ஆகியோருக்கு, இம்முறை, ’ஹொய்சாலா விருது’ வழங்கப்படுகிறது.
அவசர ,அவசியத்திற்கு தேவையான எண்கள்:
நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய, அவசிய தொடர்பு எண்கள்.பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்துவிட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு : 93833 37639
பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828
மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க——–044 – 26530504 / 26530599
வாடகைத் தாய்களாகப் போய்,புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424
ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட் 044- 25353999 / 90031 61710 / 99625 00500
ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445
சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )
மனிதஉரிமைகள் ஆணையம் ————-––044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-09383337639
போலீஸ் SMS :- —————————————-9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–98400 00103
வங்கித் திருட்டு உதவிக்கு ———————-9840814100
வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-044-28551155
பெண்களுக்கான உதவி : ——-—-–————044-23452365
தமிழ்நாடு மகளிர் ஆணையம் —————044-25264568
விலங்குகள் பாதுகாப்பு —————————044 – 22354959 / 22300666
போலீஸ் : —————————————–——-100
தீயணைப்புத்துறை :————————-—-—-101
ஆம்புலன்ஸ் : —————————————-–102, 108
போக்குவரத்து விதிமீறல———————––103
விபத்து :————————————————-–100, 103
பெண்களுக்கான அவசர உதவி : ——-—-–1091
குழந்தைகளுக்கான அவசர உதவி :——-–1098
அவசர காலம் மற்றும் விபத்து : ———-—1099
முதியோர்களுக்கான அவசர உதவி:—-—1253
தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
கடலோர பகுதி அவசர உதவி : ———-—–1093
ரத்த வங்கி அவசர உதவி : —————-—–1910
கண் வங்கி அவசர உதவி : —————-—–1919
நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும்
எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.
நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும் இயங்கும்.
இது அனைத்திற்குமான அவசர உதவி எண்
கணவன் – மனைவி கூட்டாக வீட்டுக் கடன் பெற முடியுமா?
வீடு வாங்க அல்லது கட்ட முடிவு செய்துவிட்டீர்களா? வங்கியில் வீட்டுக் கடனை வாங்கித்தானே வீடு வாங்க அல்லது கட்டப் போகிறீர்கள்? உங்கள் வீட்டில் கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறீர்களா? ஆம் என்றால், நீங்கள் இருவரும் இணைந்து வீட்டுக் கடன் வாங்கலாமே!
வீடு கட்ட முடிவு செய்ததுமே பலருக்கும் இருக்கும் ஒரே கனவு, எல்லா வசதிகளையும் புதிய வீட்டில் ஏற்படுத்திவிட வேண்டும் என்பதுதான். ஆனால், அதற்கான பட்ஜெட்டைப் போடும்போது செலவு அதிகமாகக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கலாம். இந்தத் தொகையை வங்கியில் அப்படியே கேட்கும்போது, எதிர்பார்க்கும் தொகையை வங்கிகள் கொடுத்துவிடுவதில்லை. ஒருவேளை கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் சென்று மாதச் சம்பளம் பெறுபவர்களாக இருந்தால், பிரச்சினையே இல்லை. அதிகமாக வீட்டுக் கடனை வங்கியில் பெற்றுக் கொள்ளலாம். கணவன் - மனைவி இணைந்து வாங்குவதில் இதுதான் மிகப்பெரிய நன்மை.
பொதுவாக வீட்டுக் கடன் வாங்கும்போது கடன் வாங்கும் நபர் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் நிகர சம்பளத்தை வங்கிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளும். இதை வைத்துதான் எவ்வளவு கடன் வழங்கலாம் என்பதை வங்கிகள் தீர்மானிக்கும். கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து கடன் வாங்க விண்ணப்பித்தாலும் இதே முறைதான் கடைப்பிடிக்கப்படும். இருவரின் சம்பளத்தையும் கணக்கில் கொண்டே கடன் தொகையை வங்கிகள் நிர்ணயிக்கும். இதை ‘மாத நிகர வருமானம்’ என்று சொல்வார்கள். பொதுவாகத் தனி நபராகப் பெறும் வீட்டுக் கடனைவிட இந்தத் திட்டத்தில் அதிகமாக வங்கிகள் கடன் கொடுக்கும்.
என்னென்ன வேண்டும்?
இணைந்து கடன் வாங்கும்போது வங்கி ஸ்டேட்மென்ட், சம்பளச் சான்றிதழ், கடந்த 3 ஆண்டுகளில் தாக்கல் செய்த வருமான வரி விவரங்கள் உள்ளிட்டவையோடு வழக்கமாகக் கேட்கப்படும் சான்றிதழ்கள் அனைத்தையும் வங்கியில் வழங்க வேண்டும். இதன் பிறகு பலகட்ட சரிபார்ப்பு பணிகளுக்குப் பிறகு வயது, சொத்து, வீடு கட்டப்போகும் அல்லது வாங்கப்போகும் இடத்தின் மதிப்பு, கடனைத் திரும்பச் செலுத்தும் திறன் உள்ளிட்டவற்றை வைத்துக் கடன் தருவது பற்றி வங்கிகள் முடிவு செய்யும்.
இணை கடன்தாரர்
இந்த இடத்தில் ஒரு சந்தேகம் ஏற்படலாம். பொதுவாக வீடு கட்டப்படும் மனை யார் பெயரில் இருக்கிறது, அல்லது யார் பெயரில் வீடு வாங்குகிறார்கள் என்பதைப் பார்த்து அவர்களுக்குத்தானே வீட்டுக் கடன் கொடுப்பார்கள் என்று நினைக்கலாம். உண்மைதான். “ஒருவேளை கணவன் பெயரில் மனை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இப்போது மனைவியை ‘கோ ஃபாலோயர்’ எனப்படும் இணை கடன்தாரராக வங்கிகள் நிர்ணயித்துவிடும். இப்படி நிர்ணயிக்கும்போது இருவரும் இணைந்து வீட்டுக் கடன் பெறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று கூறுகிறார் முன்னாள் வங்கி அதிகாரி கோபாலகிருஷணன்.
கைத்தொழில் செய்தால்...
இதேபோல் இன்னொரு சந்தேகமும் இருக்கும். மாதச் சம்பளம் வாங்கும் மனைவி மட்டுமே இப்படிக் கணவனுடன் இணைந்து வீட்டுக் கடன் பெற முடியுமா? வேறு கைத்தொழில் செய்யும் மனைவி கணவனுடன் இணைந்து வீட்டுக் கடன் பெற முடியாதா என்றும் சந்தேகம் எழலாம். கைத்தொழில் செய்பவர்களும்கூட இணைந்து வீட்டுக் கடன் வாங்க முடியும் என்றும் கூறுகிறார் கோபாலகிருஷணன்.
“இந்த முறையில் மனைவி சம்பாதிக்கிறார் என்பதை வங்கியிடம் நிரூபிக்க வேண்டும். அதுதான் முக்கியம். ஒருவேளை மனைவி கைத்தொழில் மூலம் தினமும் ரூ.200, ரூ.300 சம்பாதிக்கிறார் என்றால், அந்தத் தொகையை வங்கியில் தொடர்ந்து டெபாசிட் செய்வது, அடுத்த நாளே எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை. இப்படிச் செய்யும்போது வங்கிக்கு நம்பகத்தன்மை ஏற்படும். இதை வைத்துக்கூட இருவரும் இணைந்து வீட்டுக் கடனைப் பெற முடியும்” என்கிறார் கோபாலகிருஷ்ணன்.
மனைவி வேலையை விட்டால்...
ஒருவேளை குறிப்பிட்ட ஆண்டுக்குப் பிறகு மனைவி ஏதோ ஒரு காரணத்துக்காக வேலையை விட்டுவிட்டால் என்ன ஆகும்? ஒரு பிரச்சினையும் இல்லை. வங்கிக்குச் சென்று, கடன் பெற்றபோது இருவரும் இணைந்து கடன் பெற்றோம் என்றும், இப்போது மனைவி வேலையில் இல்லை என்பதையும் எழுதித் தர வேண்டும். மேலும் தன் மனைவியும், தானும் சேர்ந்து செலுத்திய கடனைத் தான் முழுமையாகச் செலுத்துவதாகக் கணவன் வங்கிக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
வரிச்சலுகை
கணவன் - மனைவி கூட்டாக இணைந்து வீட்டுக் கடன் பெற விண்ணப்பிக்கும் போது, அதிகமாக வீட்டுக் கடன் கிடைப்பது மட்டுமல்ல, இன்னும் சலுகைகளும் இருக்கின்றன. வீட்டுக் கடனுக்குச் செலுத்தும் அசல், வட்டி ஆகியவற்றின் மீது இருவரும் தனித்தனியாக வரிச்சலுகை பெற முடியும். மனைவி வேலையில்லாமல் போகும்போது, முழுப் பணத்தையும் கணவரே செலுத்தினால், அதற்காக முழுச் சலுகையையும் கணவன் பெறவும் முடியும்.
முழு தவணைத் தொகையையும் கணவர்தான் செலுத்தினார் என்பதை மனைவியிடம் நூறு ரூபாய் முத்திரைத் தாளில் எழுதி வாங்கிச் சமர்ப்பிக்க வேண்டும். ஆடிட்டர் உதவியோடு இந்தப் பணியை மேற்கொள்ளலாம்.
கூட்டாகக் கடன் வாங்கும்போது, வீட்டுக் கடனுக்கு எடுக்கப்படும் காப்பீட்டுக்கான ப்ரீமியம் தொகையை இருவரும் பாதியாகப் பிரித்துக்கொண்டு செலுத்தலாம்.
வாரிசுகள்
இந்தக் கூட்டு கடன் திட்டத்தைக் கணவன் - மனைவி மட்டுமே இணைந்து பெற முடியும் என்று நினைக்க வேண்டாம். கணவன், மனைவி அல்லது தந்தை, மகன் என வாரிசுகளும் இணைந்தும்கூட வாங்கலாம்.
சிவப்பு விளக்குகளை யார் யார் பயன்படுத்தலாம்? தமிழக அரசு புதிய உத்தரவு:
சிவப்பு, நீல வண்ண விளக்குகளை எந்தெந்த அதிகாரிகள் பயன்படுத்தலாம் என்பது குறித்து தமிழக அரசு புதிய உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா சனிக்கிழமை பிறப்பித்த உத்தரவு:
அரசு வாகனங்களின் மேல்புறத்தில் சிவப்பு விளக்குகள் பொருத்துவதை முறைப்படுத்துவது தொடர்பாக, மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில், அரசு வாகனங்களில் சுழலும் வகையிலான சிவப்பு விளக்குகளையும், சாதாரண வகை சிவப்பு விளக்குகள், நீல வண்ண விளக்குகளை யார் யாரெல்லாம் பயன்படுத்தலாம் என்பது தொடர்பாக போக்குவரத்துத் துறை ஆணையர் பரிந்துரைகளை அனுப்பியுள்ளார். அந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு தமிழக அரசு உத்தரவைப் பிறப்பிக்கிறது.
அதன்படி, சுழலும் வகையிலான சிவப்பு விளக்குகளைப் பயன்படுத்த அதிகாரம் பெற்றவர்கள்: மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர்.
சுழலும் வகையில் இல்லாமல், சாதாரண வகை சிவப்பு விளக்குகளை 14 பேர் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் விவரம்: சட்டப்பேரவை துணைத் தலைவர், தலைமைச் செயலாளர், ஆலோசனைக் குழுவின் தலைவர், உறுப்பினர்கள், மாநில ஆலோசனைக் குழுவின் தலைவர், உறுப்பினர்கள், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர், மாநில சட்ட ஆணையத்தின் தலைவர், மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தின் தலைவர், மாநில தேர்தல் ஆணையர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், உயர் நீதிமன்ற அரசு தலைமை வழக்குரைஞர், மாநில திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர், தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் ஆகியோர். இதேபோல, காவல் துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் தங்களது வாகனங்களில் சுழலும் வகையிலான நீல வண்ணத்தைக் கொண்ட விளக்குகளைப் பொருத்திக் கொள்ளலாம்.
அவர்களின் விவரம்: போலீஸ் டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி.,க்கள், ஐ.ஜி.,க்கள், டி.ஐ.ஜி.,க்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகரக் காவல் ஆணையர்கள், கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் (சட்டம்-ஒழுங்கு) ஆகியோர்.
சில அதிகாரிகள் தங்களதுப் பணி காரணமாக, சாலை வழியாகச் செல்லும் போது அவர்கள் தடுக்கப்படாமல் இருப்பதற்காக தங்களது வாகனங்களில் சுழலும் வகையிலான நீல வண்ணத்தைக் கொண்ட விளக்குகளைப் பொருத்திக் கொள்ளலாம்.
அந்த அதிகாரிகளின் விவரம்: அரசுத் துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், பொதுத் துறை நிறுவனங்கள், வாரியங்களின் தலைவர்கள், மாவட்ட நீதிபதிகள், பெருநகர முதன்மை நீதிபதிகள், உயர் நீதிமன்றப் பதிவாளர், கூடுதல் ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், துணை ஆட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், மாநகராட்சி மேயர்கள், மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர்கள் ஆகியோர்.
அவசரக் காலங்களில் இயங்கக் கூடிய தீயணைப்பு, மீட்புப் பணித் துறை வாகனங்கள், போக்குவரத்துத் துறையின் அமலாக்கப் பிரிவு வாகனங்கள், காவல் துறையின் ரோந்து வாகனங்கள் ஆகியன சிவப்பு, நீலம், வெள்ளை என மூன்று வகையான நிறங்களில் எதையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், ஆம்புலன்ஸ் வாகனங்களை ஊதா நிறக் கண்ணாடியைக் கொண்ட ஒளிரும் சிவப்பு விளக்குடன் இயக்கலாம் என்று உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா தெரிவித்துள்ளார்.
ஆர்.டி.ஐ.யின்கீழ் தகவல் தராத 50 அதிகாரிகளுக்கு 25,000 அபராதம்:
லக்னோ: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு துறைகளில் தகவல்கள் கோரப்பட்டிருந் தது. ஆனால், தகவல்களை குறிப்பிட்ட காலத்துக்குள் அளிக்காமல், அதிகாரிகள் சுணக்கம் காட்டி வருவதாக, மாநில தகவல் ஆணை யர் ஹபீஸ் உஸ்மானுக்கு புகார்கள் குவிந்தன.அதன்பேரில், அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கூட்டத்தை அவர் கூட்டி, புகார்கள் குறித்து விவாதித்தார். இதையடுத்து, உரிய தகவல்களை அளிக்காத, பல்வேறு துறைகளை சேர்ந்த 50 அதிகாரிகளுக்கு, தலா ஸி25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நிரந்தர பதிவாளர், தேர்வு ஆணையர் இல்லாத திறந்த நிலை பல்கலை:
மூன்றாண்டுகளாக, நிரந்தர பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இன்றி, பொறுப்பு அதிகாரி களை கொண்டே, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை செயல்பட்டு வருவதாக, புகார் எழுந்துள்ளது.
விதிகளை மீறி...:
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை, துவக்கப்பட்டு, 10 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக, பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பேராசிரியர்களே, கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர். இதில், பல்கலை பொறுப்பு பதிவாளராக இருந்த, பேராசிரியர் முருகனுக்கு, விதிகளை மீறி, ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது குறித்து, கவர்னர் வரை பிரச்னை சென்றது. இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. 'ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக இருப்பவர், அக்குழுவின் செயலரான பதிவாளர் பதவியில் இருக்கக்கூடாது' என, பல்கலை விதி இருப்பதால், பேராசிரியர் முருகன், சில தினங்களுக்கு முன், பதிவாளர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, அப்பதவிக்கு, கணிதத்துறை மூத்த பேராசிரியர், முருகன், பொறுப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார். அதே போல், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கும், பதவியில் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, கல்வியாளர் ஒருவர் கூறியதாவது: பல்கலையில், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவிகளுக்கு நிரந்தர நியமனத்திற்கு, கடந்த ஆண்டு டிசம்பரில், விளம்பரம் வெளியிடப்பட்டது. அதற்கு, பலர் விண்ணப்பித்தும் இதுவரை நியமனம் நடக்கவில்லை.
6 மாதங்களுக்குள்...:
விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளில் இருந்து, 6 மாதங்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு, நியமனம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், விண்ணப்பங்கள் இயல்பாகவே ரத்தாகி விடும். ஆனால், இந்த விளம்பரம் வெளியிடப்பட்டு, 11 மாதங்கள் முடிந்து விட்டது. அதற்கு விண்ணப்பங்களையும் பரிசீலிக்க முடியாது. எனவே, இந்த விவகாரத்தில், அரசு தலையிட வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
அரசு பள்ளியில் 10 மதிப்பெண் வாங்கினால் பிளஸ் 1 'பாஸ்': உதவிபெறும் பள்ளியில் 60 வாங்க வேண்டுமாம்:
பிளஸ் 1 தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயத்தில், பள்ளிகளுக்கிடையே, அதிக முரண்பாடு இருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், அம்பலமாகி உள்ளது. அரசு பள்ளிகளில், பாடத்திற்கு, 10 மதிப்பெண் வீதம் வாங்கினால், பிளஸ் 1 பாஸ் எனும் நிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில், 40 முதல் 60 மதிப்பெண் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 1 வகுப்பில், பொதுவாக மாணவர்களை, அதிகளவில் தோல்வி அடைய செய்வதில்லை. வருகைப் பதிவேடு மற்றும் பாடங்களில், ஓரளவிற்கு மதிப்பெண் பெற்றிருந்தால், 'பாஸ்' போட்டு விடுகின்றனர். இந்த நிலை, அரசு பள்ளிகளிலும், மெட்ரிக் பள்ளிகளிலும் மட்டுமே காணப்படுகின்றன. அரசு உதவிபெறும் பள்ளிகளில், பாடத்திற்கு, 40; 50; 60 மதிப்பெண் என, நிர்ணயித்து, மாணவர்களை, அதிகளவில், தோல்வி அடையச் செய்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், அம்பலத்திற்கு வந்துள்ளது. பிளஸ் 1 வகுப்பில், மாணவர் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை, அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும் வகையில், பள்ளி கல்வித்துறை, எந்த அளவுகோலையும் நிர்ணயிக்கவில்லை. மாறாக, அந்தந்த பள்ளி ஆசிரியர் குழுவே, தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை நிர்ணயிக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சியில் குறை வந்துவிடக் கூடாது என்பதற்காக, சுமாராக படிக்கக் கூடிய மாணவர்களை, பிளஸ் 1 வகுப்பிலேயே, வடிகட்டுவது, தற்போது தெரிய வந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர், முத்தரசன், தகவல் அறியும் உரிமை சட்டத் தின் மூலம், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் வெவ்வேறு வகையான மதிப்பெண் நிலவரத்தை அறிந்துள்ளார்.
அவர் கூறியதாவது: சென்னை, ஷெனாய் நகரில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2012 13ம் கல்வி ஆண்டில், பிளஸ் 1 தேர்ச்சிக்கு, ஆங்கிலம், இயற்பியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கு, தலா , 10 மதிப்பெண் நிர்ணயித்துள்ளனர். கணிதம், வணிகவியல் போன்ற பாடங்களுக்கு, 15 மதிப்பெண் என, நிர்ணயித்துள்ளனர். ராயப்பேட்டையில் உள்ள, வெஸ்லி மேல்நிலைப் பள்ளியில், தலா, 40 மதிப்பெண் என்றும், வில்லிவாக்கம், சிங்காரம்பிள்ளை மேல்நிலைப்பள்ளியில், தலா, 60 மதிப்பெண் என்றும் நிர்ணயித்துள்ளனர். அரசு பள்ளிகளில், 10 மதிப்பெண் முதல், 15 மதிப்பெண் வரை தான் உள்ளது. உதவி பெறும் பள்ளிகளில் மட்டும், 40 மதிப்பெண், 60 மதிப்பெண் என, நிர்ணயிப்பது, எந்த வகையில் நியாயம். உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களை, அதிகளவில், 'பெயில்' ஆக்குகின்றனர். கல்வித்துறை, அனைத்து வகை பள்ளிகளுக்கும், ஒரே வகை மதிப்பெண்ணை, தேர்ச்சிக்கு நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு, முத்தரசன் கூறினார். கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'இந்த பிரச்னையை, செயலரின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் சரி செய்யப்படும். அனைத்து வகை பள்ளிகளுக்கும், பிளஸ் 1 தேர்ச்சிக்கு, சரிசமமான மதிப்பெண் நிர்ணயம் செய்யப்படும்' என, தெரிவித்தது.
Subscribe to:
Posts (Atom)